தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தீவிரம் அதிகமாகியுள்ளது. இனி வரும் நாட்களில் தமிழ்நாடு முழுவதும் இதே அளவில் வெயில் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டிற்குள் முடங்கி, கடும் அவதியடைகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 98.6 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
