அதிமுக கட்சியில் செங்கோட்டையன் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் இது பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் கூறியதாவது, அதிமுகவில் யார் பெரியவர் என்ற ஈகோ பிரச்சனை கிடையாது.

திமுக போன்ற குடும்ப ஆதிக்கம் செலுத்தும் கட்சியும் கிடையாது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருக்கும்போது தான் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றார். அதேபோன்று 2026 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் திமுகவும் ஆட்சியை இழக்கும். நீங்கள் அதிமுக பற்றி என்னதான் துருவி துருவி  கேள்வி கேட்டாலும் கண்டிப்பாக அதிமுக உடைக்க முடியாத ஒரு இயக்கம். என்ன சதி செய்தாலும் சூழ்ச்சி செய்தாலும் அதனை தொண்டர்களே உடைத்து விடுவார்கள் என்று கூறினார்.