தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வந்து கொண்டிருக்கும் நடிகர் அஜித். இவருடைய நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கடந்த வாரம் வெளிவந்த திரைப்படம் தான் விடாமுயற்சி. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்கியிருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்போடு இருந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றதோடு கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது.
படத்தி திரிஷா, அர்ஜுன், ரெஜினா மற்றும் ஆரவ் ஆகியோரின் நடிப்பையும் ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள். எமோஷனலான ஆக்ஷன் கதை களத்தில் உருவான இப்படம் நல்ல வசூல் படைத்தது வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் நடித்த ஆரவ் அஜித்திற்கு நன்றி தெரிவித்து பதிவு போட்டுள்ளார். அதில், “அன்புள்ள அஜித் சார் விடாமுயற்சி படத்தில் நடிக்க வாய்ப்பு அளித்ததற்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன்.
இது ஒரு வாழ்நாள் அனுபவம். மறக்க முடியாத நல்ல நினைவுகள். வாழ்க்கை பாடங்கள் நிறைந்தது. உங்களின் ஆர்வமும், பணிவும், அர்ப்பணிப்பும் ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்தில் என்னை பெரிதும் கவர்ந்தது. நீங்கள் நடிக்கும் விதமும் அனைவரிடமும் அன்பாக பழகுவதும் என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. என்னை நம்பியதற்கு நன்றி. இந்த பயணத்தை நான் எப்போதும் நேசிப்பேன். எதிர்காலத்தில் உங்களுடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவேன் என்று நம்புகிறேன்” நன்றியுடன் ஆரவ்… என்று பதிவிட்டுள்ளார்.
