இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போட்டி போன்று இலங்கையில் நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடர் இலங்கை பிரிமியர் லீக் என்ற பெயரில் நடத்தப்பட்டு வருகிறது .இந்த வருடம் இலங்கை பிரீமியர் லீக் தொடர்பான வீரர்கள் ஏலம் இன்று நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் இலங்கை கிரிக்கெட் அணி வீரரும், ipl தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரருமான மதிஷா பதினரா அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற பெருமையை கொண்டுள்ளார்.
2024 lpl தொடர்பான வீரர்கள் ஏலத்தில் பதினாரா 50,000 டாலர்கள் என்னும் ஆரம்ப விலைப்பட்டியல் விலையில் பட்டியலிடப்பட்டார் .இவரை வாங்க பல அணிகள் போட்டியிட்டன. இதன் காரணமாக இவருக்கானஏலமானது உயர்ந்தது அதனைத் தொடர்ந்து ஆயிரம் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 99 லட்சத்து 96 ஆயிரத்து 900 விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். இதனால் lpl வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட வீரர் என்ற சாதனையை பதினாரா படைத்துள்ளார்.
