“ஸ்கேட்டிங்கில் சாதனை படைத்த கரூர் மாணவர்கள்”… குவியும் பாராட்டு..!!!

ஸ்கேட்டிங் போட்டியில் கரூர் மாணவர்கள் சாதனை படைத்துள்ளார்கள்.

மராட்டிய மாநிலத்தில் உள்ள நாக்பூரில் தேசிய ஸ்பீடு ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில் கரூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு ஸ்கேட்டிங் அகாடமிகளை சேர்ந்த 23 மாணவர்கள் பங்கேற்று தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.

இதில் மொத்தம் 29 தங்கம், 17 வெள்ளி, 5 வெண்கலம் என 51 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார்கள். மேலும் தனி நபர் சாம்பியன்ஷிப் கோப்பையையும் தட்டி சென்றனர். இதைத்தொடர்ந்து வெற்றி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பெற்றோர்கள் பாராட்டினார்கள்.