“தேசிய தொழுநோய் ஒழிப்பு தின விழா”… உறுதிமொழி ஏற்பு..!!!

அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் தேசிய தொழுநோய் விழிப்புணர்வு விழா நடைபெற்றது.


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயலதா தலைமை தாங்க சுகாதார ஆய்வாளர் செண்பகமூர்த்தி மாணவிகளுக்கு தொழுநோய் குறித்தும் மருத்துவ  சிகிச்சை பற்றியும் விரிவுரை வழங்கினார். இந்த தேசிய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவிகள் உறுதிமொழி ஏற்று கொண்டார்கள்.