காவலாளியை கொன்று பணம், செல்போன் கொள்ளை…. இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு..!!!

காவலாளியை கொன்று செல்போன் பணத்தை கொள்ளை அடித்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்வு வழங்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் கருக்கன்காட்டு புதூர் பகுதியைச் சேர்ந்த செலம்பணன் என்பவர் டிராக்டர் ஒர்க் ஷாப்பில் காவலாளியாக வேலை செய்தார். இவர் சென்ற 2017 ஆம் வருடம் ஜூலை 5ஆம் தேதி இரவு அன்று ஒர்க்ஷாப் முன்பாக காவல் பணியில் இருந்தார். அதிகாலை 2 மணி அளவில் பிரசாந்த் என்பவர் ஒர்க் ஷாப்பில் புகுந்து திருட திட்டமிட்டார்.

ஒர்க் ஷாப்புக்கு முன்பாக காவலில் அமர்ந்திருந்து பணியில் ஈடுபட்டிருந்த முதியவர் செலம்பணனை இரும்பு கம்பியால் தாங்கி கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த 1500 மதிப்புள்ள செல்போன் மற்றும் ஒர்க் ஷாப்பை உடைத்து உள்ளே இருந்த மூவாயிரம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்துவிட்டு முதியவரின் உடலை போர்வைக்குள் சுற்றி கடைக்கு பின்புறமாக இருக்கும் சமையலறையில் மறைத்து வைத்துவிட்டு தப்பிவிட்டார்.

இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு பிரசாந்தை கைது செய்தார்கள். இவர் மீது ஏற்கனவே ஏழு குற்ற வழக்குகள் இருந்தது தெரியவந்தது. இது குறித்த வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் கொலை செய்துவிட்டு செல்போன், பணத்தை கொள்ளையடித்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனையும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

Leave a Reply