“வெளியூர் மீன்பிடி படகுகளை அனுமதிக்க கூடாது”… மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு..!!!

தருவை குளத்தில் வெளியூர் மீன் பிடி படகுகளை அனுமதிக்க கூடாது என நாட்டுப்படகு மீனவர் சங்கத்தினர் போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்துள்ளார்கள்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தருவைகுளம் அருகில் இருக்கும் புனித நீக்குலாசியார் நாட்டுப்படகு மீனவர் நலச்சங்க செயலாளர் தொம்மை ராஜ் மற்றும் கூட்டுறவு சங்கத் தலைவர் உள்ளிட்டோர் தலைமையில் மீனவர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்தார்கள். இதன்பின் போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு ஒன்றை கொடுத்தார்கள். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, எங்கள் ஊரில் 250 விசை படகுகளும் 150 சிறிய நாட்டு படகுகளும் இருக்கின்றது.

எங்கள் ஊரில் 200 மீட்டர் சிறிய மீன் பிடி இறங்குதளம் இருக்கின்றது. இதனை நாங்கள் பயன்படுத்தி வருகின்றோம். இந்த நிலையில் வெளியூர் படகுகள் தருவைகுளத்தில் மீன்களை இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்கலாம் என கோயில் நிர்வாகத்தினர் முடிவு செய்திருக்கின்றார்கள். இது எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் வெளியூர் படகுகள் தருவை குளத்திற்கு வந்தால் மிகப்பெரிய போராட்டமே நடக்கும். ஆகையால் பிரச்சனையில்லாமல் எங்களை தொழில் செய்ய அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply