ரஜினி-சிபி சக்கரவர்த்தி கூட்டணியில் உருவாக இருந்த படம்… கைவிட்டதற்கு இதுதான் காரணம்..!!!

ரஜினி-சிபி சக்கரவர்த்தி கூட்டணி கைவிட்டதற்கான காரணம் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது ஜெயிலர் திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை அடுத்து ரஜினி லால் சலாம் திரைப்படத்திலும் நடிக்கின்றார். இந்த இரண்டு திரைப்படங்களையும் லைக்கா நிறுவனம் தயாரிக்கின்றது. மேலும் ஒரு திரைப்படத்திலும் ரஜினி காந்த் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். இந்த திரைப்படத்தை சிபிச் சக்கரவர்த்தி இயக்குவதாக இருந்தது.

ஆனால் சி.பி.சக்கரவர்த்தி கூறிய கதை ரஜினிக்கு திருப்தி அளிக்காத நிலையில் இந்த ப்ராஜெக்டில் இருந்து அவர் வெளியேறி விட்டதாக சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் இது உண்மை இல்லை என செய்தி வெளியாகி இருக்கின்றது. இந்த திரைப்படத்தில் ஸ்கிரிப்ட் ஒர்க்கில் சி.பி.சக்கரவர்த்திக்கு உதவியாக ராஜமவுலியின் தந்தை கஜேந்திரா பிரசாந்த் இருந்தார்.

அவருக்கும் சிபிச் சக்கரவர்த்திக்கு செட்டாகவில்லையாம். அவர் கூறும் விஷயங்கள் சிபி சக்கரவர்த்திக்கு ஏற்புடையதாக இல்லாததால் சிபி சக்ரவர்தியால் இந்த திரைப்படத்தை இயக்க முடியாது என ரஜினி முடிவு செய்ததாக செய்தி வெளியாகி இருக்கின்றது.