Varisu Vs Thunivu: அஜித்தை ஓவர் டேக் செய்த விஜய்… கேரளாவில் இம்புட்டு வசூலா..!!!!

வாரிசு-துணிவு வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமா உலகின் உச்ச நட்சத்திரங்களான விஜய் மற்றும் அஜித் நடிப்பில் வாரிசு மற்றும் துணிவு திரைப்படம் சென்ற ஜனவரி 11-ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்பட்டது. வாரிசு திரைப்படம் வெளியான 11 நாட்களில் 250 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக தயாரிப்பாளர் தெரிவித்திருக்கின்றார். ஆனால் துணிவு திரைப்படம் வசூல் குறித்த அறிவிப்பை வெளியிடாமல் இருக்கின்றது. இந்த நிலையில் இரண்டு திரைப்படங்களின் வசூல் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளது.

கேரளாவில் வாரிசு திரைப்படம் 12.4 கோடி வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. அதில் ஷேர் மட்டும் 5.1 கோடி ரூபாய் என செய்தி வெளியிட்டு இருக்கின்றது. துணிவு திரைப்படம் கேரளாவில் மொத்தமாக 4.9 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. இதில் ஷேர் மட்டும் 2 கோடி ரூபாய் கிடைத்திருப்பதாக கூறப்படுகின்றது. இதனால் துணிவு திரைப்படத்தை விட வாரிசு திரைப்படத்தின் வசூல் இரண்டு மடங்கு அதிகமாக பெற்றிருக்கின்றது. இருப்பினும் இரண்டு திரைப்படங்களுக்கும் தற்போது லாபம் கிடைக்கவில்லை என கூறப்படுகின்றது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply