மல்லிகைப்பூ 4,000 தொட்டதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

தமிழக முழுவதும் சென்ற சில வாரங்களாக பனியின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பூக்களின் வரத்து தொடர்ச்சியாக குறைந்தது. இதன் காரணமாக திருப்பூர் பூ மார்க்கெட்டில் பூ வரத்து குறைய தொடங்கியது. பூக்களின் விலை ராக்கெட்ட வேகத்தில் உயர்ந்து வருகின்றது. சாதாரணமான நாட்களில் ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூபாய் 400-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் சென்ற 10 நாட்களில் 1200, 1600, 2000, 2800 என ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருகின்றது.

மல்லிகை பூவின் விலையை தொடர்ந்து முல்லை பூ, ஜாதி மல்லி, காக்கடா உள்ளிட்ட பூக்களின் விலையும் மடமட என உயர்ந்து வருகின்றது. மேலும் தற்போது பொங்கல் பண்டிகை என்பதால் பூக்களின் விலை உச்சத்தில் இருக்கின்றது. நேற்று ஒரு கிலோ மல்லிகை பூ அதிகபட்சமாக 4000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. இதே போல் முல்லைப்பூ 2,800க்கும், ஜாதிமல்லி 1400 க்கும் காக்கடா ரூபாய் 1400 க்கும் சம்பங்கி 220 ரூபாய்க்கு பட்டுப்பூ 120 ரூபாய்க்கும் அரளி 450 ரூபாய்க்கும் செவ்வந்தி 160 ரூபாய்க்கும் விற்பனையானது.

பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். இருப்பினும் பொங்கல் பண்டிகை என்பதால் பூக்களை வாங்கி செல்கின்றார்கள். நேற்று திருப்பூர் மார்க்கெட்டில் அனைத்து வகை பூக்களும் சுமார் பத்து டன் விற்பனை ஆகி இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளார்கள்.