இயக்குனர் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு யாத்திரை சென்றுள்ளார்.

அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் சென்ற 11-ம் தேதி வெளியான திரைப்படம் துணிவு. இத்திரைப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இத்திரைப்படத்தை தொடர்ந்து அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த திரைப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசை அமைக்கின்றார். மே மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் சபரிமலைக்கு யாத்திரை சென்று இருக்கின்றார். இது குறித்த போட்டோவையும் வீடியோவையும் அவர் தனது இணைய பக்கத்தில் பகிர்ந்து இருக்கின்றார். முன்னதாக சபரிமலைக்கு சாமி தரிசனம் செய்த வீடியோவை எச்.வினோத் வெளியிட்டு இருந்தார் குறிப்பிடத்தக்கது.

 

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)