94-வது ஆஸ்கர் விருது விழா… “சிறந்த துணை நடிகருக்கான விருதை தட்டிச் சென்ற காதுகேளாத நடிகர்”…!!!

சிறந்த துணை நடிகருக்கான விருதை ட்ரான் கோட்சுருக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஹாலிவுட் சினிமா நடிகர், நடிகைகளுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் உரிய கவுரவத்தை வழங்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டதுதான் அகடமி அவார்டு என்கிற இந்த ஆஸ்கர் விருது. 1929ஆம் ஆண்டு மே 16ம் தேதி ஹாலிவுட்டின் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்த முதல் விருது விழாவில் பார்வையாளர்களாக கலந்து கொண்டவர்கள் 270 பேர். அப்போது தெரியாது இவ்வளவு பிரமாண்டமாக உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்படும் விருது விழாவாக இது எதிர்காலத்தில் இருக்குமென்று.

இந்நிலையில் 94 வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. ஹாலிவுட்டின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருது நிகழ்ச்சியை ஏமி ஷூமர், வாண்டா லைக்ஸ் ஆகியோர் தொகுத்து வழங்கினர். இந்நிலையில் “கோடா” திரைப்படத்தில் நடித்ததற்காக ட்ராய் கோட்சுருக்கு துணை நடிகருக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் தன் படக்குழுவினருக்கும் குடும்பத்தாருக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். அரங்கில் இருந்த அனைவரும் இவருக்கு சைகையின் மூலம் பாராட்டுக்களை தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *