“வேட்புமனு திரும்ப பெற அவகாசம் நிறைவு” தமிழகத்தில் 939 வேட்பாளர்கள் போட்டி…!!

மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் திரும்பப்பெறும் கால அவகாசம் நிறைவடைந்தது.

தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெறுகிறது அதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கி 26 ஆம் தேதி  3 மணி வரை நடைபெற்றது.இந்நிலையில் வேட்பு மனுதாக்கல் நிறைவடைந்த நிலையில் 27ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.அதில் அதிமுக திமுக கூட்டணி வேட்பாளர்கள் மக்கள் நீதி மையம் வேட்பாளர்கள் அதிமுக வேட்பாளர்கள் நாம் தமிழ் வேட்பாளர்கள் சுயேச்சை வேட்பாளர்கள் என ஏராளமானோர் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டது.

வேட்புமனு திரும்ப பெற க்கான பட முடிவு

தமிழகத்தில் மொத்தமுள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட தாக்கல் செய்யப்பட்ட 1587 வேட்புமனுக்களில் 932 மனுக்கள் ஏற்கப்பட்டன. 655 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டன . சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தலில் 518 வேட்பு மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது 305 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 213 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. வேட்பு மனுக்களை திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு இன்று பிற்பகல் 3 மணியுடன் நிறைவடைந்து இறுதி வேட்பாளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.அதில் தமிழகத்தில் நாடாளுமன்ற வேட்பாளர்களாக 939  களத்தில் உள்ளனர்.அதே போல சட்டமன்ற இடைத்தேர்தலில் 309 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.