93 வயதில் தலைவர்…. கனிமொழி பதிவிட்ட ட்வீட்….!!

திமுக தலைவர் கருணாநிதியின் முதலாமாண்டு நினைவை முன்னிட்டு 93 வயதில் நீதி மன்றத்தில் தலைவர் என்று பதிவிட்டுள்ளார்.

திமுக_வின் முன்னாள் தலைவர் கருணாநிதி மறைந்து இன்றோடு ஓராண்டு ஆன நிலையில் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திமுகவினர் அனுசரித்து வருகின்றனர் . சென்னையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தலைமையில் கட்சியினர் , தொண்டர்கள் பேரணியாக சென்று மெரினாவில் உள்ள கருணாநிதி சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Image

மேலும் கருணாநிதியின் நினைவையொட்டி அக்கட்சியின் தொண்டர்கள் சமூக வலைதளத்தில் பல்வேறு #ThankYouகலைஞர்  உள்ளிட்ட பல ஹாஷ்டாக்_களை ட்ரெண்டாக்கி வருகின்றனர். இதே போல திமுக மக்களவை உறுப்பினரும் , கருணாநிதியின் மகளுமான கனிமொழி தனது ட்வீட்_டர் பக்கத்தில் 93 வயதில் நீதிமன்றத்தில் தலைவர் என்று நீதிமன்றத்தில் கருணாநிதி இருப்பது போன்ற போட்டோ_வை பதிவிட்டுள்ளார். இதை அதிகமான திமுகவினர் பகிர்ந்து வருகின்றனர்.