சேலம் மாவட்டத்தில் மாற்று கட்சியில் இருந்து விலகி அதிமுகவின் பலர் இணைந்த விழாவில் பேசிய அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த 8 வழிச்சாலையை அன்றைய தினம் திமுக முழுவதும் எதிர்த்து போராட்டம் நடத்தினார்கள். அந்த கூட்டணி கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. கொஞ்ச நஞ்ச போராட்டம் நடத்தல். எல்லாருமே போராட்டம் நடத்துனாங்க. இப்போ எல்லாம் ஜால்ரா அடிக்கிறாங்க.

அதே திட்டத்தை திமுக கொண்டு வருகின்றது என அறிவிக்கின்றார்கள். மத்திய அரசுகிட்ட போராடிட்டு இருக்கிறாங்க. இன்றைக்கு அந்த கூட்டணி கட்சி எல்லாம் அவருக்கு ஒத்து ஊதுகிறார்கள். இன்றைக்கு அருமையா இந்த சாலை அமைத்திருக்கலாம். இந்த நாலு வருஷத்துல அந்த சாலை பிரம்மாண்டமாயிருக்கும். இங்கிருந்து சென்னைக்கு அருமையா நாம எல்லாம் போகலாம், அதை கெடுத்து தொலைச்சுட்டாங்க.

அதை வேண்டும் என்றே  விவசாயிகளை தூண்டிவிட்டு, மொத்தமா அதுல 8%  விவசாயிகள்தான் எங்களுடைய நிலம் பாதிக்கும் என்று போராட்டத்துக்கு வந்தாங்க. 92% நிலம் கொடுப்பதற்கு தயாராக இருந்தார்கள். இன்னும் சொல்லப்போனால் திருவண்ணாமலை,  திருவள்ளூர், காஞ்சிபுரம் இந்த பகுதி நிலத்தில் இருக்கிறவங்க எல்லாரும்… 50 இலட்சம் ஏக்கர். கவர்மெண்ட்  4 மடங்கு கொடுக்குது அப்படின்னா…  2 கோடி. விலை மதிப்பு 90 லட்சம் தான். மார்க்கெட் மதிப்பு 90 லட்சம். ஆனால் 2 கோடி கொடுத்தாங்க என தெரிவித்தார்.

சாலைக்கு நிலம் கொடுக்கின்ற விவசாயிகள் ஒன்றுகூடி பாராட்டு விழா நடத்தினார்கள். எதற்காக சொல்கிறேன் என்றால் ? ஒரு திட்டத்தை கொண்டு வருகின்ற போது, வேண்டுமென்றறே திட்டமிட்டு எதிர்ப்பது, ஆட்சிக்கு வந்த பிறகு,  அதே திட்டம் நல்ல திட்டம் என்று அந்தத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வது. இதனால் மக்கள் தான் பார்க்கிறார்கள். இதுதான் திமுக ஆட்சி. இதுதான் திராவிட மாடல் என என விமர்சனம் செய்தார்.