இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில் சொந்த முயற்சியில் சினிமாவுக்கு  வந்தவர்களை விட குடும்ப பின்னணியில் இருந்து சினிமாவிற்குள் வந்து வெற்றி கண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகும். அதில் வாரிசு நடிகராக உள்ளே நுழைந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உச்ச நட்சத்திரமாக உயர்ந்து அதிக அளவிலான சொத்துக்கள் கொண்ட வாரிசு நடிகர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

அதில், பாலிவுட் நடிகரும், நமது 90’s கிட்ஸ் குழந்தைகளிடையே க்ரிஷ் படத்தின் மூலம் சூப்பர் ஹீரோவாகவும், தூம் திரைப்படம் மூலம் இளைஞர்களிடையே ஆக்சன் ஹீரோவாகவும் அறியப்பட்ட பிரபல நடிகர் ஹிருத்திக் ரோஷனுக்கு ரூ 3,100 கோடி சொத்துக்கள் உள்ளன.

மேலும் அவரின் HRX நிறுவன மதிப்பு ரூபாய் 7,300 கோடியாகும். அவர் திரைப்படங்களில் நடிப்பதற்கு ரூபாய் 100 கோடி சம்பளமாக வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கண்டவற்றின் அடிப்படையில் பாலிவுட்டில் அதிகம் சொத்து வைத்துள்ள வாரிசு நடிகராக அவர் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக சல்மான் கான் 1900 கோடியும், அமீர்கான் 1850 கோடியும், ராம்சரண் 1300 கோடியும் சொத்துக்கள் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.