தளபதி 67-ல் இவரு தான் வில்லன்… விஷால் இல்ல… பூஜையில் பங்கேற்ற பிரபல நடிகர்..!!!

தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் பூஜை நேற்று முன்தினம் போடப்பட்டது. பூஜையில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இத்திரைப்படத்தில் நடிகர் விஷால் வில்லனாக நடிக்க போவதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஷாலுக்கு முன்பாகவே வில்லனாக நடிக்க அர்ஜுனிடம் லோகேஷ் அணுகி இருக்கின்றார்.

அப்போது அர்ஜின் இல்லை என்ற பிறகு தான் விஷாலிடம் சென்று நடிக்க கேட்டிருப்பதாக செய்தி ஒன்று வெளியானது. இந்த நிலையில் படபிடிப்பு பூஜையில் அர்ஜுன் கலந்து கொண்டிருக்கின்றார். இதன் மூலம் தளபதி 67 திரைப்படத்தில் அர்ஜுன் நடிப்பது உறுதியாகி இருக்கின்றது என சொல்லப்படுகின்றது. மேலும் விழாவில் த்ரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோரும் பங்கேற்றதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. விரைவில் இத்திரைப்படம் குறித்து போட்டோஸ் மற்றும் வீடியோ வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.