கதையையே கேட்கல… அந்த ஒன்னுக்காக நடிக்க ஒப்புக்கொண்ட அஜித்… ஆனா வினோத் இப்படி பண்ணிட்டாரே..!!!

துணிவு திரைப்படம் குறித்து தகவல் ஒன்றை வினோத் தெரிவித்துள்ளார்.

வினோத்-அஜித் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது துணிவு திரைப்படம் உருவாகி வருகின்றது. இத்திரைப்படத்தை போனி கபூர் தயாரிக்கின்றார். மேலும் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்க ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் 2023 பொங்கலுக்கு ரிலீஸ் ஆகின்றது. தற்போது படத்தின் டப்பிங் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் சார்பாக தமிழகத்தில் உதயநிதி வெளியிட உள்ளார். தமிழக வெளியீடு உரிமையை உதயநிதி பெற்றுள்ள நிலையில் வெளிநாடுகளில் வெளியிடும் உரிமையை லைக்கா நிறுவனம் பெற்று இருக்கின்றது.

இத்திரைப்படத்தின் பிரமோஷனுக்காக இயக்குனர் வினோத் பல ஊடகங்களில் பேட்டி அளித்து வருகின்றார். அந்த வகையில் ஒரு பேட்டி ஒன்றில், அஜித் சார் துணிவு திரைப்படத்தின் கதையைக் கேட்கவில்லை. திரைப்படத்தில் இடம் பெறும் ஒரு சீன் மட்டும் தான் கேட்டார். அது அவருக்கு ரொம்ப புடிச்சி இருந்தது. அதனால் தான் திரைப்படத்தில் நடிக்க ஒத்துக் கொண்டார். ஆனால் அஜித் சாருக்கு மிகவும் பிடித்த அந்த சீனை படத்தில் வைக்க முடியாமல் போய்விட்டது என தெரிவித்துள்ளார்.