18 வயதில் கனவு கண்டோம்… தற்போது நிறைவேறியிருக்குது… பிரியா பவானி சங்கர் நெகிழ்ச்சி..!!!!

ப்ரியா பவானி சங்கர் புதிய வீடு ஒன்றை வாங்கி குடியேறியுள்ளார்.

தமிழ் சினிமா உலகில் பிரபல நடிககையாக வலம் வந்து கொண்டிருக்கின்றார் பிரியா பவானி சங்கர். இவர் முதலில் செய்தி வாசிப்பாளராக தொடங்கி பின் சின்னத்திரையில் கல்யாணம் முதல் காதல் வரை என்ற தொடரில் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தார். இவரின் நடிப்பு திறமையை பார்த்து இயக்குனர்கள் வெள்ளி திரையில் அறிமுகப்படுத்தினார்கள். இவர் மேயாத மான் திரைப்படத்தின் மூலமாக வெள்ளித்திரையில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், களத்தில் சந்திப்போம், ஓ மணப்பெண்ணே, யானை பல உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் ஏற்கனவே தனது நீண்ட நாள் நண்பரை காதலிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். இந்த நிலையில் இவர் சென்னையில் தற்போது புதிய வீடு வாங்கி குடியேறி உள்ளார். இது பற்றி தனது சோசியல் மீடியாவில் அவர் தெரிவித்துள்ளதாவது, 18 வயதில் கடற்கரைக்குச் சென்று இங்கு ஒரு வீடு வாங்க வேண்டும் என்ற கனவோடு பொழுதை கழித்தோம். அதன்படி தற்போது புதிய வீட்டில் அடியெடுத்து வைத்திருக்கின்றோம் என பதிவிட்டு இருக்கின்றார். மேலும் தனது காதலர் நெற்றியில் முத்தமிடும் போட்டோவையும் பகிர்ந்துள்ளார். இப்புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. மேலும் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றார்கள்.