ஹரி வைரவன் குழந்தையின் படிப்பு செலவு… ஏற்று கொள்வதாக விஷ்ணு விஷால் அறிவிப்பு…!!!!

நடிகர் ஹரி வைரவன் குழந்தையின் கல்விச் செலவை விஷ்ணு விஷால் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, குள்ளநரி கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடித்தவர் நடிகர் ஹரி வைரவன். இவர் நீண்ட நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த நிலையில் சென்ற 3-ம் தேதி அதிகாலை 12.15 அளவில் இயற்கை எய்தினார். இது திரையுலகத்தினர் இடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் நடிகர் ஹரி வைரவனின் குழந்தையின் கல்விச் செலவை தான் முழுவதுமாக ஏற்றுக் கொள்வதாக தெரிவித்து இருக்கின்றார்.

அவர் கூறியுள்ளதாவது, ஹரி வைரவன் எனக்கு ரொம்ப நெருக்கமானவர். சென்ற ஆறு மாதங்களாக அவருடன் தொடர்பில் தான் இருந்தேன். இது வெளியே யாருக்கும் தெரியாது. என்னால் என்னென்ன உதவிகளை செய்ய முடியுமோ அதைச் சென்ற ஆறு மாதங்களாக செய்தேன். மேலும் அவரின் மனைவியிடமும் பேசினேன். என்ன உதவி வேண்டுமானாலும் நான் செய்கின்றேன். குழந்தையின் படிப்பு செலவையும் ஏற்றுக் கொள்கின்றேன் என அவர்களிடம் தெரிவித்திருக்கின்றேன். அவர் அனுப்பிய கடைசி வாய்ஸ் மெசேஜ் கூட என்னிடம் இருக்கின்றது. அவர் என்னை எப்பவும் மாப்ள என்று தான் சொல்லுவார். அந்த மெசேஜில் தேங்க்யூ மாப்ள, நீ எனக்கு உதவி செய்யறது ரொம்ப சந்தோஷம் என கூறியிருந்ததாக விஷ்ணு விஷால் தெரிவித்துள்ளார்.