ஓடிடியில் வெளியாகியும் மாஸ் காட்டும் “காந்தாரா”… இன்றுடன் 50-வது நாள்..!!!

காந்தாரா திரைப்படம் தமிழில் இன்றுடன் 50-வது நாளாக ஓடிக்கொண்டிருக்கின்றது.

கன்னடத்தில் செப் 30-ம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது காந்தாரா. மேலும் வசூலையும் அள்ளியது. ரிஷப் செட்டி இயக்கத்தில் தொன்மக் கதையை மையமாகக் கொண்டு வெளியாகி உள்ள திரைப்படம் காந்தாரா. கன்னடத்தில் வரவேற்பு பெற்றதை தொடர்ந்து தற்போது தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இத்திரைப்படம் உலக அளவில் ரூபாய் 400 கோடி வசூல் செய்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கின்றது. சில நாட்களுக்கு முன்பாக ஓடிடி தளத்தில் வெளியானது.

தமிழில் 50வது நாளில் 'காந்தாரா' Entertainment பொழுதுபோக்கு

இத்திரைப்படத்தை தமிழில் டப்பிங் செய்து சென்ற அக்டோபர் 14ஆம் தேதி வெளியிட்டார்கள். இத்திரைப்படம் இன்றுடன் ஐம்பதாவது நாளை தொட்டுள்ளது. ஓடிடி தளத்தில் வெளியான பின்பும் டப்பிங் செய்யப்பட்டு தமிழில் ஓடி வருவது ஆச்சரியத்தை ஏற்பட்டுள்ளது.