பகத்பாசிலை இயக்கும் பிரபல இயக்குனர்… யார் அவர் தெரியுமா..?

பகத்பாசிலை பிரபல இயக்குனர் இயக்குகின்றார் என தகவல் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் சூப்பர் மேன் கதையம்சத்தை கொண்டு சென்ற வருடம் வெளியான திரைப்படம் மின்னல் முரளி. இத்திரைப்படத்தை பசில் ஜோசப் என்பவர் இயக்கினார். இத்திரைப்படத்தில் கிராமத்தில் இருக்கும் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரே நேரத்தில் சூப்பர் மேன் பவர் கிடைக்கின்றது. அதை அவர்கள் எப்படி பயன்படுத்துகின்றார்கள் என்பதை மையமாக வைத்து படத்தை கொடுத்திருக்கின்றார். இத்திரைப்படம் பாலிவுட்டில் இருக்கும் இயக்குனர்கள் வரை பாராட்டை பெற்றது.

இவர் ஒரு நடிகர் என்பதால் அடுத்த படம் இயக்காமல் தற்போது நடிக்க ஒத்துகொண்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றார். அண்மையில் இவர் நடிப்பில் வெளியான ஜெய ஜெய ஜெய ஹே என்ற திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் உருவாகி வெளியான 33 நாட்களில் 42 கோடி வசூல் செய்தது. இதனால் இவருக்கு பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றது. ஆனால் இவர் ஏற்கனவே நடிக்க ஒப்புக்கொண்ட திரைப்படங்களை முடித்து கொடுத்துவிட்டு மீண்டும் டைரக்ஷனில் கவனம் செலுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார். அடுத்ததாக பகத் பாசில் நடிக்க உள்ள திரைப்படத்தை இயக்க இருக்கின்றார் என்ற செய்தி வெளியாகியிருக்கின்றது.