எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு… பாதியில் நிறுத்தப்பட்ட பூமி பூஜை… பாதுகாப்பு பணியில் போலீசார்..!!!!

எரிவாயு குழாய் பதிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பூமி பூஜை பாதியில் நிறுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அருங்குளம் கிராமத்தில் இயற்கை எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு பூமி பூஜை போட எரிவழி குழாய் பதிக்க தனியார் நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம ஊராட்சி மன்ற தலைவர் தலைமையில் 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தாசில்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

இங்கு எரிவாயு திட்டம் வருவது குறித்து இதுவரை எங்கள் ஊராட்சிக்கு எந்த ஒரு தகவலையும் வருவாய் துறையினர் கூறவில்லை. எங்கள் கிராமம் வழியாக இத்திட்டத்தை செயல்படுத்த நாங்கள் அனுமதிக்க மாட்டோம். அப்பகுதியில் இருந்த எரிவாயு குழாய்களை அப்புறப்படுத்தினார்கள். அங்கு எவ்வித அசம்பாவித சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்கள். இதன் காரணமாக எரிவாயு திட்டத்திற்கான பூமி பூஜை பாதையில் நிறுத்தப்பட்டது.