கவர்ச்சி தாரகை சில்க் ஸ்மிதா… 62-வது பிறந்தநாள் இன்று..!!!!

சில்க் ஸ்மிதா 26 வருடங்களைக் கடந்தும் அவருக்கான இடம் சினிமாவில் தற்போதும் வெற்றிடமாக இருக்கின்றது.

மக்கள் மனதில் தனது நடிப்பாலும் கவர்ச்சியாலும் கவர்ந்து இடம் பிடித்தவர் சில்க் ஸ்மிதா. தமிழ் சினிமா வாழ்க்கையில் கொடி கட்டி பறந்திருந்தாலும் தனது நிஜ வாழ்க்கையில் பல சோகங்களையும் ஏமாற்றங்களையும் சந்தித்தவர். இவரின் 62-வது பிறந்தநாள் இன்று. ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சில்க் ஸ்மிதா 1960 ஆம் வருடம் டிசம்பர் 2-ம் தேதி ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். குடும்ப வறுமை காரணமாக நான்காம் வகுப்பு வரையிலேயே படித்தார். மேலும் அவருக்கு சிறுவயதிலேயே திருமணமும் நடைபெற்றது.

திருமண வாழ்க்கையும் பெரியதாக இல்லை. இவர் வேலை தேடி சென்னைக்கு வந்த போது திரைப்படத்துறையில் ஒப்பனையாளராக தனது முதல் பணியை தொடங்கினார். இதன்பின் நடிகர் வினுச்சக்கரவர்த்தியின் உதவியால் 1979 ஆம் வருடம் வெளியான வண்டிச்சக்கரம் திரைப்படத்தில் சாராயம் விற்கும் சில்க் என்ற பெண்கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் மூலம் அவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் விஜயலட்சுமி என்ற பெயர் சில்க் ஸ்மிதா என மாற்றியது.

இதன்பின் அவர் பெரும்பாலும் கவர்ச்சியான வேடத்தில் நடித்தார். அவரின் தோற்றம், கண்கள், நடன அசைவு உள்ளிட்டவை மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளார். 450 திரைப்படங்களுக்கு மேல் இவர் நடித்திருக்கின்றார். இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்த சில்க் ஸ்மிதா நிஜ வாழ்க்கையில் நிறைய தோல்வி, ஏமாற்றம், துன்பங்களுக்கு உள்ளாகி இருக்கின்றார். இவர் 1996 ஆம் வருடம் செப்டம்பர் 23ஆம் தேதியன்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரின் நினைவு தற்போதும் நினைவில் இருக்கின்றது.