ரஜினி படம் தொடர் தோல்வியை சந்திக்க இதுதான் காரணம்… முக்கிய பிரபலம் ஓபன் டாக்…!!!!

ரஜினி திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்திப்பது குறித்து பிரபல பத்திரிக்கையாளர் பேசி உள்ளார்.

தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். இவர்  நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இத்திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் உள்ளிட்டோர் நடிக்கின்றார்கள். இத்திரைப்படத்தின் படபிடிப்பானது தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகின்றது.

இப்படத்தை அடுத்து ரஜினி, சிவசக்கரவர்த்தி இயக்கத்தில் நடிக்க இருப்பதாகவும் அத்திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்த நிலையில் அண்மையில் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் ரஜினியின் திரைப்படங்கள் தொடர் தோல்வியை சந்தித்து வருவது குறித்து பேசினார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, ரஜினி இந்த கால இயக்குனர்களின் ட்ரெண்டிற்கு செட்டாகாமல் இருப்பது அவரின் திரைப்படங்களின் தோல்விக்கு காரணம். மற்ற நடிகர்கள் இளம் இயக்குனர்களுடன் நன்கு செட்டாகி விடுகின்றார்கள். ஆனால் ரஜினி இளம் இயக்குனர்களுடன் செட்டாகாமல் இருப்பதால் தான் அவரின் திரைப்படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் இருக்கின்றது. இந்த கால இளம் இயக்குனர்கள் படம் எடுக்கும் விதம் ரஜினிக்கு குழப்பமாக இருக்கின்றது என தெரிவித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.