டாப்ஸி நடிக்கும் “ப்ளர்”… ட்ரெய்லர் ரிலீஸ்…!!!

டாப்ஸி நடிக்கும் ப்ளர் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

பிரபல நடிகையாக வலம் வரும் டாப்ஸி தற்போது ப்ளர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் சென்ற 2010 ஆம் வருடம் ஸ்பானிஷ் மொழியில் வெளியான ஜூலியாஸ் ஐஸ் திரைப்படத்தின் ரீமேக்கான ஹிந்தியில் தயாராகி இருக்கின்றது.

டாப்ஸி, குல்சன் தேவ்வையா நடிப்பில் உருவாகி இருக்கும் இத்திரைப்படத்தை அஜய் பாஹர் இயக்கியிருக்கின்றார். இத்திரைப்படமானது வருகின்ற டிசம்பர் 9-ம் தேதி நேரடியாக ஜி5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக உள்ளது. தற்போது இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.