ரத்த சாட்சி டீசரை வெளியிட்ட சிம்பு… படக்குழுவிற்கு வாழ்த்து..!!!

ரத்த சாட்சி திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

புகழ் பெற்ற எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கதைகளில் ஒன்றான கைதிகள் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் ரத்த சாட்சி. இத்திரைப்படத்தை ரபிக் இஸ்மாயில் இயக்குகின்றார். இப்படத்திற்கு சாவே தியாஸ் இசையமைக்க ஜெகதீஸ்வரர் பதிவு செய்கின்றார். மேலும் இந்த படத்தில் கண்ணா ரவி, ஹரிஷ் குமார், இளங்கோ குமரவேல், கல்யாண மாஸ்டர் என பலர் நடித்திருக்கின்றார்கள்.

இத்திரைப்படத்தின் ப்ரோமோவை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பகிர்ந்திருந்தார். தற்போது இத்திரைப்படத்தின் டீசரை நடிகர் சிம்பு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அன்பு ஓர் ஆயுதம். ஆஹா தமிழில் இந்த புரட்சிகரமான படத்தை பாருங்கள். படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் என பதிவிட்டு இருக்கின்றார்.