மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணி… புதிதாக மையம் திறப்பு…!!!!

மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் திறக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை மின் பகிர்மான வட்டத்தின் சார்பாக மின் இணைப்பு எண்ணை ஆதார் உடன் இணைக்கும் படி அரசு அறிவித்ததன் பேரில் 6 மின் அலுவலகங்களில் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் மையம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. உடுமலை திருப்பூர் சாலையில் இருக்கும் மேற்பார்வை பொறியாளர் அலுவலக வளாகத்தில் இருக்கும் மின் கட்டண வசூல் மையத்தில் இருக்கும் அறையில் மற்றொரு கவுண்டரில் இந்த மையமானது திறக்கப்பட்டது.

இங்கு மின் இணைப்பு எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்காக நேற்று முன்தினம் பலர் வந்தார்கள். அப்போது சர்வர் கோளாறு காரணமாக பணிகள் சிறிது நேரம் பாதிப்புக்குள்ளானது. கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் மின் இணைப்பு எண்ணை ஆதார் உடன் இணைப்பதற்கு கூடுதல் மையம் அமைக்க வேண்டும் என மின் நுகர்வோரின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.