அந்த படத்தை கைவிட்டபோது நான் கதறி அழுதேன்… உருக்கமாக பேசிய எஸ்.ஜே.சூர்யா..!!!!

எஸ்.ஜே.சூர்யா உயர்ந்த மனிதன் திரைப்படத்தை கைவிடப்பட்ட போது கதறி அழுததாக தெரிவித்துள்ளார்.

நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வெப் தொடரில் அறிமுகமாகின்றார். அவர் நடிக்கும் வதந்தி என்ற வெப்த்தொடரை புஷ்கர் மற்றும் காயத்ரி தயாரிக்கின்றார்கள். போலீஸ் அதிகாரியான எஸ்.ஜே.சூர்யாவை சுற்றி பொய்களால் வலை பின்னப்படுகின்றது. இதில் தான் சிக்கி இருப்பதை உணர்ந்து அதிலிருந்து அவர் எப்படி தன்னை விடுவித்துக் கொள்கின்றார். என்பது குறித்து சொல்லும் புதுமையான கதை இதுவாகும். இந்த கதை ரசிகர்களை மகிழ்விப்பதோடு இறுதியில் படம் முடிந்த பிறகு அவர்களை சிந்திக்கவும் வைக்கும். இந்த தொடர் அதன் இறுதி வரை ரசிகர்களை கட்டுண்டு கிடக்கச் செய்யும் என தயாரிப்பாளர்கள் கூறியிருந்தனர்.

இந்த தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வருகின்ற டிசம்பர் 2-ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கின்றது. இந்த நிலையில் அமிதாப் பச்சனுடன் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்த உயர்ந்த மனிதன் திரைப்படம் கைவிடப்பட்ட போது தான் கதறி அழுததாகவும் இந்திய அளவில் கிடைத்த வாய்ப்பு பறிபோனது எனவும் வருத்தமாக இருந்ததாகவும் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்திருக்கின்றார்.