9 வருஷம் காதலிச்சோம்!… நான் கொடுத்த காரை அவனுக்கு கொடுத்துட்டா…. புலம்பும் வாலிபர்….!!!!

பிரேக்அப் ஆனவர்கள் பெரும்பாலும் சமூகவலைதள பக்கங்களில் புலம்புவது வழக்கம். அந்த அடிப்படையில் மலேசியாவைச் சேர்ந்த ஒரு நபர் தன்னுடைய முன்னாள் காதலிக்கு பரிசாக கொடுத்த காரை திரும்பக்கேட்டது பற்றி தன் பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். 9 வருடங்களாக அப்பெண்ணுடன் அவர் காதலிலிருந்து வந்தார். அதன்பின் சமீபத்தில் தான் காதல் முறிவு ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு அந்த பெண் தன்னை ஏமாற்றி விட்டதாகவும், தான் கொடுத்த காரை அவரது புது காதலன் ஓட்டிவருவது பிடிக்காததால் அதனை கேட்டதாகவும் பதிவிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக அந்நபர் வெளியிட்ட பதிவில், நானும் அவளும் 9 வருஷமாக காதலித்து வந்தோம். ஆனால் இப்போது என்னை அவர் பிரேக்அப் செய்து விட்டார். நாங்கள் பிரிந்ததை ஏற்றுக் கொள்கிறேன். பிரேக் அப் ஆகிவிட்டதற்காக இதுவரையிலும் எதையுமே நான் அவரிடம் கேட்டதில்லை. எனினும் நான் அவருக்கு பரிசாக கொடுத்த காரை அவரது புது காதலன் பயன்படுத்தி வந்தது சமீபத்தில்தான் எனக்கு தெரியவந்தது. நாங்கள் பிரேக் அப் செய்வதற்கு முன்பு இருந்தே அந்த பையனுடன் அவர் பழகி வந்திருக்கிறார்.

டேட்டிங்கில் இருந்தபோதெல்லாம் அவருக்கு கார் உட்பட ஏகப்பட்ட பரிசுகளை கொடுத்திருக்கிறேன். இதனிடையில் என்னை அவர் இழிவுபடுத்தி, ஏமாற்றியதை கூட நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. ஆனால் அந்த காரை அவரின் புது காதலன் ஓட்டிச்செல்வது எனக்கு பிடிக்கவில்லை. தற்போது எனக்கு என்ன தெரியவேண்டும் எனில் , நான் வாங்கிக்கொடுத்த கார் உள்ளிட்ட பொருட்களை திரும்பி கேட்பதில் எதும் தவறா? என ஆதங்கத்துடன் கேட்டுள்ளார். இதனை கண்ட நெட்டிசன்கள் பலரும் அந்நபருக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். ஒருசிலர் அதை அப்படியே விட்டுவிடுங்கள் எனவும் கூறியுள்ளனர்.