அலட்சியத்தின் உச்சம் : 8 மாத குழந்தை மரணம்….. செல்போன் ஜார்ஜ் போடும் போது நேர்ந்த விபரீதம்….!!

இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் அனைவரது கைகளிலும் வந்துவிட்டது. மொபைல் போன் வந்த பிறகு அனைவரும் உயிரற்ற மொபைலுக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்களே தவிர, உயிருள்ள நமக்கு பிடித்த நபர்களிடம் நேரம் செலவிடுவதும் இல்லை. சில சமயத்தில் அந்த மொபைலுக்கு அளிக்கக்கூடிய முக்கியத்துவத்தை கூட நேசிப்பவர்களுக்கு நாம் அளிப்பதில்லை. அந்த வகையில்,

திருவள்ளூர் மாவட்டம் பாலவாக்கத்தில் வசித்து வரும் மாரிமுத்து என்பவர், வீட்டில் இரவில் செல்போன் சார்ஜ் போடுவதற்காக ஜங்ஷன் பாக்ஸ் ஒன்றை மெயின் பிளக் பாயிண்டில் செருகி தரையில் வைத்துவிட்டு அதன் மூலம் செல்போனுக்கு சார்ஜ் போட்டு விட்டு பின் ஸ்விட்சை அமர்த்தாமல் ஜங்ஷன் பாக்ஸையும்  தரையில் இருந்து  எடுக்காமல் மாரிமுத்து வெளியில் சென்றுவிட்டார்.

இதையடுத்து ஜங்ஷன் பாக்ஸ் இன் அருகில் விளையாடிக் கொண்டிருந்த 8 மாத குழந்தை மதன் ஜங்ஷன் பாக்ஸ் இன் துளைகளுக்குள் விரலை விட, தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக குழந்தை உயிரிழந்தது. செல்போனிற்கு சார்ஜ் போட வேண்டும் என்பதற்காக செலுத்திய தனி கவனத்தை போல், குழந்தையின் பாதுகாப்பு கருதி தனி கவனம் செலுத்தி இருந்தால், இந்தத் துயரம் நேர்ந்திருக்காது. பெற்றோர்களே உங்கள் குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.