சுற்றுலா விசா மூலம்… இளைஞர்களை வேலைக்கு அனுப்பி வைத்த போலி முகவர்.. போலீசார் அதிரடி நடவடிக்கை…!!!

வெளிநாட்டு வேலைக்கு சுற்றுலா செல்ல சுற்றுலா விசா மூலம் இளைஞர்களை அனுப்பி வைத்து பல லட்சம் ரூபாய் மோசடி செய்த போலி முகவரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜோஷ்பின் ராயன் என்பவர் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் அவர் கூறியுள்ளதாவது, சென்னை வடபழனியில் இருக்கும் தனியார் வளாகத்தில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு அலுவலகம் நடத்தி பல லட்சம் ரூபாய் மோசடி நடைபெற்று வருகின்றது. இதனால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் திருவேற்காடு ஸ்ரீதேவி நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்த ரமேஷ் என்பவர் வெளிநாடுகளில் வேலை குவிந்து கிடக்கின்றது என இளைஞர்களிடம் மூளைச்சலவை செய்து அவர்களை வெளிநாடுகளுக்கு சுற்றுலா விசா மூலம் அனுப்பி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதன்பின் போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 45 பேரின் பாஸ்போர்ட்டுகள், 100 பேரின் மருத்துவ பரிசோதனை அறிக்கைகள், மோசடி செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கம்ப்யூட்டர், கார், மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தார்கள்.