சாலையில் ஏற்பட்ட 15 அடி திடீர் பள்ளம்… சரி செய்யும் பணி தீவிரம்… போக்குவரத்து மாற்றம்…!!!

புளியந்தோப்பு சாலையில் 15 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது.

சென்னை மாவட்டத்தில் உள்ள பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் புளியந்தோப்பு போலீசார் இரண்டு நாட்களுக்கு முன்பாக நள்ளிரவில் ரோந்து பணியில் ஈடுபட்டார்கள். அப்போது அதிகாலை 2 மணி அளவில் திடீரென 15 அடி ஆழத்தில் பள்ளம் ஏற்பட்டு இருப்பதைக் கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தார்கள். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தற்போது பள்ளத்தைச் சுற்றிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு பள்ளத்தை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்பணி முடிய ஒரு வாரம் ஆகலாம் என தெரிகின்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக டவுட்டன் நோக்கி செல்லக்கூடிய வாகனங்கள் ஓட்டேரி பிர்க்கிளின் சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. இதுபோல எழும்பூர், புரசைவாக்கம் வழியாக பெரம்பூர், வியாசர்பாடி நோக்கி வாகனங்களும் புரசைவாக்கம் மற்றும் சூளை வழியாக திருப்பி விடப்பட்டிருக்கின்றது.