அறிவிப்பே இன்னும் வெளியாகல… அதுக்குள்ள இத்தனை கோடியா… தளபதி 67-ஆல் ஆச்சரியத்தில் கோலிவுட்..!!!

தளபதி 67 திரைப்படம் குறித்த புதிய செய்தி ஒன்று வெளியாகி இருக்கின்றது.

தமிழ் சினிமாவில் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய படங்களை இயக்கி தனக்கென்று ஓர் இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான விக்ரம் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனையடுத்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஜய் நடிக்கும் 67வது படத்தை இயக்க உள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு தளபதி 67-ல் இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் ஆரம்பமாக உள்ளது. இத்திரைப்படம் குறித்து ரசிகர்கள் தகவல்கள் கேட்டு வருகின்ற நிலையில் லோகேஷ் எந்த ஒரு தகவலையும் சொல்லாமல் இருக்கின்றார். இந்த நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இத்திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை நெட்வொர்க் நிறுவனம் 160 கோடி ரூபாய்க்கும் சாட்டிலைட் உரிமையை  சன் டிவி 80 கோடி ரூபாய்க்கும் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றது. இத்திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவலே இன்னும் வெளியாகாத நிலையில் 240 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடந்திருப்பதாக செய்தி வெளியானது கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Leave a Reply