சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை… என்னன்னு கேக்குறீங்களா..? இதோ பாருங்க..!!!

சினேகாவை தொடர்ந்து சமந்தாவிற்கும் அதே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கில்  முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. சமீபத்தில் தனக்கு மாயோசிடிஸ் என்ற அரிய வகை நோய் உள்ளதாக சோசியல் மீடியாவில் அறிவிப்பை வெளியிட்டார். இந்த நிலையில் அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்து ஹைதராபாத்தில் இருக்கும் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இது குறித்து அறிந்த ரசிகர்கள் கவலை அடைந்தார்கள். இந்த நிலையில் அது வெறும் வதந்தி என்ன தெரிய வந்திருக்கின்றது. சமந்தா தற்போது அவரின் வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கின்றார்.

அவர் மருத்துவமனையில் இல்லை என செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். சமந்தாவிற்கு உடல்நலம் சரியில்லாமல் இருக்கும் நிலையிலும் அவரைப் பற்றி யார் தான் இப்படி வதந்தியை கிளப்புகின்றார்களோ என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவரே உடல்நிலை பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டு வருகின்றார். இப்படி வதந்தியை பரப்ப வேண்டாம் என ரசிகர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

சென்ற சில நாட்களுக்கு முன்பாக சினேகா பற்றி வதந்தி கிளம்பியது. அவரும் அவர் கணவரும் நடிகருமான பிரசன்னாவும் பிரிந்து வாழ்வதாக வதந்தி கிளம்பியது. இதையறிந்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். இதையடுத்து சென்று சில நாட்களுக்கு முன்பாக சினேகா வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தனது கணவருடன் சேர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதற்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த புகைப்படத்தில் சினேகாவும் பிரசன்னாவும் ஒரே நிறத்தில் உடையணிந்து இருந்தார்கள். இதை பார்த்த பிறகு இந்த செய்தியில் உண்மை இல்லை என ரசிகர்கள் நிம்மதி அடைந்தார்கள்.

Leave a Reply