ஆசைகளைப் புறம்தள்ளி இலக்கை நோக்கி பயணம்… பிரச்சனையை எதிர்த்து தைரியமாக போராட வேண்டும்… ஆட்சியர் அறிவுரை…!!!

பெண்கள் ஆசைகளை புறந்தள்ளி இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும் என ஆட்சியர் உரையாற்றியுள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான இனிய குற்றங்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு கூட்டம் டி.கே.எம் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்றார். அப்போது அவர் கூறியுள்ளதாவது, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இந்த குற்றங்கள் யார் மூலம் நடைபெறுகின்றது என்பது நமக்கு தெரியும். அப்படி நடந்து கொள்பவர்களை முன்கூட்டியே அறிந்து அவர்களை நாம் பார்க்கக் கூடாது. அவர்களை விட்டு நான் விலக வேண்டும்.

பல்வேறு இடையூறுகள் வரும். அதில் கவனத்தை சிதற விடாமல் குறிக்கோளை மட்டும் மனதில் நிறுத்திக் கொண்டு வாழ்வில் சாதிக்க வேண்டும். வாழ்வில் தற்காலிகமாக சின்னஞ்சிறு ஆசைகள் பல தோன்றும். அதை பொருட்படுத்தாமல் உங்கள் இலக்கை நோக்கி பயணித்தால் நீங்கள் சமுதாய கட்டமைப்பை உருவாக்கும் இடத்திற்கு செல்வீர்கள். உங்களைப் போல நாங்களும் கல்லூரி காலங்களை கடந்து தான் வந்திருக்கின்றோம். கல்லூரியில் படிக்கும்பொழுது திருமணம் செய்து கொண்டு சிலர் சாப்பாட்டுக்கு கூட வழியில்லாமல் இருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு நாங்கள் உதவி வருகின்றோம். இந்த நிலைமை உங்களுக்கு வரக்கூடாது. பிரச்சனைகள் வந்தால் தைரியமாக போராட வேண்டும் என பேசியுள்ளார்.

Leave a Reply