ஓடும் ரயிலில் பெண்ணை கொல்ல முயற்சி… விசாரணை செய்த போலீசார்… இளைஞர் அதிரடி கைது..!!!!

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் பெண்ணிடம் கத்தி முனையில் செல்போனை பறித்துக் கொண்டு தள்ளிவிட்டு கொல்ல முயற்சித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளார்கள். 

சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது திருமண அழைப்பிதழை சத்துவாச்சாரியில் இருக்கும் உறவினருக்கு கொடுப்பதற்காக சென்னையிலிருந்து மின்சார ரயில் மூலம் நேற்று முன்தினம் அரக்கோணம் வந்தார். அதன்பின் அங்கிருந்து கன்டோன்மென்ட் நோக்கி செல்லும் மின்சார ரயில் பயணம் மேற்கொண்டார். மாலையில் காட்பாடி ரயில் நிலையத்திற்கு வந்தது. ரயில் பெட்டியில் அந்த பெண் தனியாக இருந்தார்.

அந்த இளைஞர் பெண்ணிடம் செல்போனை கொடு பேசி விட்டு தருகிறேன் எனக் கூறியிருக்கின்றார். அதற்கு அந்த பெண் நீ யார் என்று எனக்கு தெரியாதே, இதனால் உன்னிடம் செல்போனை கொடுக்க முடியாது என கூறியுள்ளார். இதேபோல் அந்த வாலிபர் மூன்று முறை கேட்டும் இளம் பெண் செல்போனை தராததால் ஆத்திரமடைந்து பெண்ணின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி செல்போனை பறித்திருக்கின்றார்.

இதனால் அந்த பெண் கூச்சல் போட்டதால் துப்பட்டாவை பிடித்து இழுத்து அவரை ரயிலில் இருந்து இளைஞர் தள்ளி உள்ளார். இதனை பார்த்த பொது மக்கள் அந்த இளம் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள். இது குறித்து அந்த இளம் பெண் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை செய்ததில் அந்த இளைஞர் குடியாத்தத்தை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இவர் காட்பாடியில் நடைபெறும் அக்னிபாத் ராணுவ ஆள் சேர்ப்பு முகாமில் சான்றிதழை சரிபார்த்துவிட்டு திரும்பும் போது இச்சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இளைஞரை கைது செய்தார்கள்.

Leave a Reply