பயிர்களை நாசம் செய்யும் மான், மயில்கள்… சாகும்வரை உண்ணாவிரதம்… விவசாயிகள் முடிவு…!!!

அவிநாசி சுற்றுவட்டார பகுதியில் மான், மயில்கள் பயிர்களை நாசம் செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக முடிவு செய்துள்ளார்கள்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ஒன்றியத்தில் 31 ஊராட்சிகளில் ஆயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றது. சென்ற 40 , 50 வருடங்களுக்கு முன்பு தென்னை, வாழை, மஞ்சள் உள்ளிட்ட விவசாயம் செழித்து வளர்ந்து எங்கு பார்த்தாலும் பச்சை பசேல் என இருந்தது. காலப்போக்கில் பருவ மழை சரியாக பெய்யாமல் விவசாயம் நலிவடைந்ததால் பலர் திருப்பூர் போன்ற நகரங்களுக்கு சென்று வெவ்வேறு தொழில்களை செய்து வருகின்றார்கள்.

இருப்பினும் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய அங்கமாக விவசாயம் தான் இருக்கின்றது. இதனால் பல இன்னல்களுக்கு மத்தியிலும் விவசாயிகள் மனம் தளராமல் விவசாயம் பார்க்கின்றார்கள். பயிர்களை நல்ல முறையில் வளர்த்து விடிய விடிய கண்விழித்து  தண்ணீர் கட்டி உரம் வைத்து பாதுகாத்து வளர்த்து வருகின்ற நிலையில் காட்டுப்பகுதியில் சுற்றி திரியும் மான்கள், மயில்கள் பயிர்களை நாசம் செய்து விடுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றார்கள்.

மேலும் சிறுத்தை நடமாட்டமும் இருக்கின்றது. இதனால் எந்த நேரத்தில் தோட்டத்திற்குள் சிறுத்தை வருமோ என்ற அச்சத்தில் இருக்கின்றோம். இதுகுறித்து தோட்டக்கலைத் துறையிடம் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு பயனும் இல்லை. ஆகையால் அவிநாசி ஒன்றியத்தில் இருக்கும் அனைத்து விவசாயிகளும் ஒன்று திரண்டு சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்வது தான் ஒரே வழி என கூறி இருக்கின்றார்கள்.

Leave a Reply