தேனி வளர்ப்புக்கு பயிற்சியுடன் கூடிய மானியம்…. அதிகாரி வெளியிட்ட தகவல்..!!!

தேனீ வளர்ப்புக்கு பயிற்சி உடன் கூடிய மானியம் வழங்கப்படுவதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டத்திலுள்ள மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது தேனீ வளர்ப்பு முறையில் விவசாயிகள் சிறப்பாக செய்வதன் மூலம் தங்கள் நிலங்களில் தேனீக்களில் அயல் மகரந்த சேர்க்கை மூலமாக கூடுதல் மகசூல் பெறுவதோடு தேன் விற்பனை மூலம் கூடுதல் வருமானமும் ஈட்ட முடியும்.

தேனீ வளர்ப்பு முறையை நேரடியாக அறிந்து கொள்வதற்கு கோயம்புத்தூர் தமிழ்நாடு அரசு வேளாண் பல்கலைக்கழகத்தில் ஒவ்வொரு மாதமும் 6-ம் தேதி பயிற்சி வழங்கப்படுகின்றது. விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக தோட்டக்கலை துறை மூலமாக 40 சதவீதம் மானியத்தில் தேனீ பெட்டிகள் வழங்குகின்றது. 2022 தோட்டக்கலை மூலம் அயல் மகரந்த சேர்க்கை அதிகரித்தல் இனத்தின் கீழ் விவசாயிகளுக்கு தேனீக்களுடன் தேனீ பெட்டிகளும் தேன் பிழியும் கருவி, புகையிடும் கருவி உள்ளிட்டவை 40% மானியத்தில் வழங்கப்படுகின்றது.

குறைவான பெட்டிகளே தற்போது இருப்பதால் முன்பதிவு செய்யும் விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சென்ற நிதி ஆண்டில் பாப்பான்குளத்தை சேர்ந்த விவசாயி தண்டபாணிக்கு 40% மானியத்தில் 10 தேனி பெட்டிகள் வழங்கப்பட்டு தற்போது தேன் எடுத்து உழவர் சந்தை மற்றும் பொதுமக்களிடம் நேரடியாக விற்பனை செய்து வருகின்றார். மேலும் விவரங்களுக்கு வட்டார தோட்டக்கலைத் துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம் என கூறப்பட்டிருக்கின்றது.

Leave a Reply