88,936 வாக்குச்சாவடியில்…. நாளை வாக்குப்பதிவு…!!

தமிழகத்தில் நாளை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிடுகின்றனர். நேற்று தேர்தல் பிரச்சாரம் முடிவடைந்தது. நாளை  தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகளில், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மக்கள் நாளை காலை ஏழு மணி முதல் வாக்களிக்கலாம். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மாலை 6 மணி முதல் 7 மணி வரை வாக்களிக்கலாம். தேர்தல் களத்தில் 3,585 ஆண்கள், 411 பெண்கள், 3,998 வேட்பாளர்கள் உள்ளனர். தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.