“84 பறக்கும் படை 20 லட்சம் பறிமுதல் “தொடரும் தேர்தல் ஆணையத்தின் வேட்டை !!…

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் பகுதியில் ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்று வரும் பட்சத்தில் எந்தவித ஆவணங்களும் இன்றி கொண்டு செல்லப்பட்ட 20 லட்சம் ரூபாய் வரையிலான பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன இந்த பணத்தை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி அவர்களிடம் ஒப்படைத்ததாகவும் , மேலும் பணப்பட்டுவாடா நடைபெறாமல் தடுக்கவும் தேர்தல் நடத்தை விதிகள் முறையாக பின்பற்றப்பட கின்றனவா என்பதை தீவிரமாக கண்காணிக்கவும் 84 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டு உள்ளது