“8000 அரசு பணியாளர்களுக்கு ஒரே நேரத்தில் பணி உயர்வு”…. கடும் அதிர்ச்சியில் ஊழியர்கள்….!!!!!!!!!!

ஒரே நாளில் 8000 பேருக்கு பணி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் போட்டி தேர்வின் அடிப்படையில் தான் பணிநியமனம் பெற்று வருகின்றார்கள். அதாவது யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷனால்   தகுதியான ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இதன் அடிப்படையில் கடந்த 2019 ஆம் வருடம் கிட்டத்தட்ட 4000 ஊழியர்கள் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து தற்போது ஒரே நேரத்தில் 8,000 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது மத்திய செயலக பணியைச் சேர்ந்த 327 இயக்குனர்கள், 1097 துணை செயலாளர்கள், 1472 பிரிவு அலுவலர்கள் போன்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டிருக்கிறது.

மேலும் செயலக எழுத்து சேவையில் உள்ள ஸ்டெனோகிராபர்கள், முதன்மை பணியாளர்கள், அதிகாரிகள், எழுத்தர்கள் மற்றும் மத்திய செயலக  ஸ்டெனோகிராபர்களும் இந்த பதவி உயர்வு பட்டியலில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். இதனை அடுத்து 157 முதன்மை பணியாளர்கள், அதிகாரிகள் மற்றும் 153 முதன்மை தனியார் செயலாளர்கள், மத்திய செயலக ஸ்டெனோகிராபர்கள் 1208 முதன்மை தனி செயலாளர்களும் பதவி உயர்வு பெற்றிருக்கின்றனர்.

அதாவது மொத்தமாக தற்போது வரைக்கும் ஒரே நாளில் 8,089 பேர் பணி உயர்வு பெற்றுள்ளார்கள். இந்த பணி உயர்வு பட்டியலில் 727 பட்டியல் சாதியினருக்கும், 207 பழங்குடியினருக்கும் என  தனித்தனியாக ஒதுக்கப்பட்டிருக்கிறது. மேலும் 5,032 பதவி உயர்வு முன்பதிவு செய்யப்படாத பதவிகளுக்கானது எனவும் தனியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் தலைமைச் செயலகத்தில் ஒரே நேரத்தில் 8,000 க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு பணி உயர்வு வழங்கப்பட்டிருப்பதால் ஊழியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *