சென்னையில் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, மாட்டுக்கறியை சாப்பிடுவார்கள் ஆனால் மாட்டு கோமியத்தை மட்டும் குடிக்க மாட்டார்களா. நான் ஒரு அலோபதி மருத்துவராக இருந்தாலும் சொல்கிறேன். மாட்டு கோமியம் உண்மையிலேயே ஒரு அமிர்த நீர் தான். மாட்டு கோமியத்தில் 80 வகையான காய்ச்சலை குணமாக்கும் நன்மை இருக்கிறது. டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவை விட மாட்டு கோமியம் ஒன்னும் கெடுதல் கிடையாது என்று கூறினார்.

அதன் பிறகு பரந்தூர் விமான நிலையம் எதிர்ப்பு போராட்டத்திற்கு விஜய் பறந்து சென்றாரா இல்லை மறந்து போனாரா.? பரந்தூர் மக்கள் 909 நாட்கள் போராடிக் கொண்டிருந்தபோது அப்போதெல்லாம் விஜய் எங்கு சென்றார் என்று கூறினார்.

மேலும் முன்னதாக சென்னை ஐஐடி இயக்குனர் காமகோடி கோமியம் குடித்தால் 15 நிமிடங்களில் காய்ச்சல் குணமாகும் என்று கூறியது சர்ச்சையாக மாறிய நிலையில் அது தொடர்பாக பலரும் தங்கள் கருத்துக்களை கூறி வருகிறார்கள். இப்படி இருக்கையில் ஆங்கில மருத்துவரான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மாட்டுக்கறியை சாப்பிடும் போது மாட்டு கோமியத்தை குடித்தால் என்ன தவறு இருக்கிறது மாட்டு கோமியத்தில் 80 வகையான காய்ச்சலை குணமாக்கும் மருந்து இருக்கிறது என்று கூறியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.