80 அடி ஆழமுடைய கிணறு…. தவறி விழுந்து பலியான மூதாட்டி…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கிணற்றுக்குள் தவறி விழுந்த மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வளையப்பட்டி கிராமத்தில் ராமாக்காள்(87) வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி நேற்று பிற்பகல் 3 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன்பிறகு மூதாட்டி வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இதனால் மூதாட்டியின் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர். அப்போது அப்பகுதியில் இருக்கும் 80 அடி ஆழமுடைய தண்ணீர் இல்லாத தோட்டத்து கிணற்றில் மூதாட்டி சடலமாக கிடந்ததை பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் கிணற்றிலிருந்து மூதாட்டியின் உடலை மீட்டனர். அதன்பிறகு காவல்துறையினர் மூதாட்டியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மூதாட்டி கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *