1 நாளுக்கு 8 லட்டு மட்டும்தான்… பட்டினி போட்ட மனைவி, விட்டுச்சென்ற கணவன்..!!

மந்திரவாதி பேச்சை கேட்டு 8 லட்டுகளை மட்டுமே உணவாக வழங்கி வந்த மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற கோரி கணவன் விண்ணப்பித்துள்ளார்.

உத்திரப்பிரதேசத்தின் மீரட்டில் திருமணமாகி பத்து ஆண்டுகளான தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில்  கணவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் மந்திரவாதியிடம் சென்ற மனைவி அவரது அறிவுறுத்தல் எனக்கூறி காலையில் நான்கு லட்டுகளையும், மாலையில் 4 லட்டுகள்  மட்டுமே உணவாக வழங்கி வந்துள்ளார்.

Image result for லட்டு

இடைப்பட்ட நேரத்தில் வேறு எதுவும் சாப்பிட தராமலும், வேறு எங்கு சென்றும் சாப்பிட அனுமதிக்க வில்லை என்றும் கணவர் குற்றம் சாட்டியுள்ளார். உணவை முற்றிலுமாக தர மறுத்ததால்,  கணவன் வேறு வழியின்றி மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்றுத் தரக் கோரி குடும்ப நல நீதிமன்றத்தை நாடியுள்ளார். விளக்கத்தை நம்பமுடியாத நீதிபதிகள் ஆலோசனைக்கு உத்தரவிட்டனர். அப்போது அந்த பெண் தனது மூடநம்பிக்கையிலிருந்து மாறத் தயாராக உள்ளதாக பிடிவாதம் பிடித்ததாக குடும்ப நலத்துறை அதிகாரிகளிடம்  தெரிவித்தது குறிப்பிடதக்கது.