8 முறை தான்…. இதை சொல்லி அனுமானை வணங்குங்க… பலனோ அதிகம்…!!

ராமருடன் போர் புரிய முடிவெடுத்த ராவணன் மயில் ராவணன் என்று ஒரு அசுரனின் உதவியை நாடினான். மயில் ராவணனும் ராமரை அளிப்பதற்காக யாகம் ஒன்று நடத்துவதற்கு முடிவு செய்தான். அந்த யாகம் வெற்றிகரமாக நடந்து முடிந்தால் ராம-லட்சுமணன் உயிருக்கு ஆபத்து நிச்சயமாக இருக்கும் என விபீஷணன் கூறியதால் மயில் ராவணனை அழிப்பதற்கு ராமர் ஆஞ்சநேயரை அனுப்பினார்.

இதனை அடுத்து ஆஞ்சநேயர் வராகர், நரசிம்மர், ஹயக்ரீவர், கருடன் ஆகியோரை வணங்கி அவர்களின் ஆசியுடனும் சக்தியுடனும் மயில் ராவணனை வதம் செய்தார். அப்போது அவர் கொண்டிருந்த ரூபம் பஞ்சமுகம் கொண்ட விஸ்வரூபம் ஆகும். இத்தகைய பஞ்ச முகம் கொண்ட ஆஞ்சநேயரை மாலா மந்திரம் துதித்து வழிபட்டால் இன்னல்கள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும்.

ஓம் இராமதூதாய ஆஞ்சனேயாய
வாயு புத்ராய மகா பலாய
சீதா துக்க நிவாரணாய, லங்காவிதாஹகாய
மஹா பலப்ரகண்டாய பல்குணசகாய
கோலாகல சகல பிரம்மாண்ட பாலகாய
சப்த சமுத்ர நிராலங்கிதாய,
பிங்கள நயனாய அமித விக்ரமாய
சூர்யபிம்ப பலசேவகாய, துஷ்ட நிராலம்பக்ருதாய
சஞ்சீவினி சமாநயன
சமார்த்தாய அங்கதலட்சுமண
கபி சைன்ய ப்ராண நிர்வாககாய
தசகண்ட வித்வம்ஸனாய
இராமேஷ்டாய பல்குணசகாய
சீதா சகித இராமச்சந்திர
ப்ராசதகாய -ட் ப்ரயோகாங்க
பஞ்சமுக ஹனுமதே நம

மேலே குறிப்பிட்ட இந்த பஞ்சமுக ஆஞ்சநேயர் மாலா மந்திரத்தை தினசரி எட்டு முறை துதித்து ஆஞ்சநேயரை வழிபட்டு வந்தால் கெட்ட கனவுகள், கிரக பீடைகள் போன்ற துயரங்கள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *