பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்தது. இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக முத்து தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு ட்ராபி வழங்கப்பட்டது. ஆனால் அவருக்கு வழங்கப்பட்ட ட்ராபியை சமூக வலைதளத்தில் பலரும் விமர்சித்திருந்தனர். இந்நிலையில் நேரலை ஒன்றில் முத்துவிடம் அவரது கோப்பை குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த முத்து, என் கண்ணுக்கு தங்கமா வெள்ளியா என்பது தெரியவில்லை. அந்த ட்ராபி மக்களின் அங்கீகாரம், அது பல கோடி மக்களின் அன்பினால் ஆனது. ரொம்ப அழகாக இருந்தது என்னோட ட்ராபி. எல்லாருக்கும் இரும்புலையோ தங்கம் முலாமோ வெள்ளி முலாமோ கொடுத்திருப்பாங்க. ஆனா எனக்கு ஒரு கல்லுல ரொம்ப அழகா அதை செதுக்கியிருந்தாங்க.

இப்போது நீங்கள் பிள்ளையார்பட்டி போனீர்கள் என்றால் அங்கு ஒரே மலையை குடைந்து ஒரு கோவில் அமைத்து இருப்பார்கள். இப்படி கல்லில் சிற்பம் செய்வது நம் நாட்டு பாரம்பரியத்தின் படி ரொம்ப ரொம்ப அழகு. மத்த நாடுகளை விட நம்ம ஊரில் இருக்கும் கோவில்களில் தான் யாழியாகட்டும் ஒரு பெண் வடிவத்தில் ஜடையாகட்டும் இதையெல்லாம் கற்களில் செதுக்குவது ரொம்ப, விளையாட்டில் இருந்து அந்த கலை சிற்பத்தை தான் ரசிச்சிட்டு போறாங்க.

அப்படி பாரம்பரியத்தோடு செஞ்ச கோப்பையாக பார்க்கிறேன். அந்த கோப்பையோட கணம் நீங்க தூக்க முடியாது, அவ்வளவு கனமா அழகா செதுக்கி எனக்கென்னமோ உண்மையில் தங்க முலாம் பூசி கொடுத்திருந்தால் கூட இவ்வளவு சிறப்பாக இருந்திருக்குமா என்று தெரியாது. எனக்குத் தெரிந்து எட்டு சீசனில் என்னுடைய ட்ராபி தான் ரொம்ப கலைத்துவமான ட்ராபி என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார்.