8 கிலோ மதிப்புள்ள ஒயர்கள்… உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி… போலிசாரின் அதிரடி நடவடிக்கை…!!

கார்பன்  ஒயரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கருப்புக்கூட்டம் கிராமத்தில் விவசாயியான வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில்  வினோத்குமாருக்கு சொந்தமான நிலத்தில் இருக்கும்   பம்பு செட்டில் இருந்து 8 கிலோ மதிப்புள்ள கார்பன் ஒயர்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து வினோத்குமார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மர்மநபர்களை தீவிரமாக  தேடிவந்துள்ளனர். இந்நிலையில்  அதே பகுதியை வசிக்கும்  ஜோசப்டேனியல்  என்பவரை காவல்துறையினர் கைது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *