தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்ற வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன. அவ்வகையில் வருகின்ற ஜனவரி 21ஆம் தேதி ஸ்ரீ விஜய் வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,நல்லம்பள்ளி தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளது.

இந்த முகாமில் 300க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ள நிலையில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவரும் வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.